பாகிஸ்தான் – சீனாவுடன் இந்தியா போருக்கு தயாரகிறது: சீன சிந்தனையாளர்கள் குழு தகவல்

சீனா அரசுக்கு அறிவுரைகள் வழங்கி வரும் சிந்தனையாளர்கள் வெளியிட்டுள்ள புளூ புக்கில் இந்தியா குறித்து எழுதியுள்ளனர். அதில் இந்தியா பற்றி கூறியிருப்பதாவது:- நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவுள்ள பாகிஸ்தானை கண்காணிக்கவும், ஆயத்தமாக இருக்கவும் இந்தியா அதிகபட்ச அக்கறை எடுத்துகொள்கிறது. மேலும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து, அதி நவீன ஆயுதங்களையும் தளவாடங்களையும் மேம்படுத்தி படைகளை வலுவூட்டி ஒரு வரையறுக்கப்பட்ட போருக்காக பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு மிரட்டல் விடுத்து வருகிறது. மேலும் சமீப காலமாக இந்தியா கப்பற்படையை விரிவுபடுத்தி, சீனாவிற்கு மிகப்பெரிய கவலையை கொடுக்கிறது. இந்தியாவின் பக்கத்து நாடுகளான இலங்கை, பங்களதேஷ், நேபாள், ஆப்கானிஸ்தானுடன் சுமூக உறவை வைத்துள்ள இந்தியா, பாகிஸ்தானுடனான உறவுகளையும் வலுப்படுத்த முயன்று வருகிறது.

இவ்வாறு அந்த புளூ புக்கில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply