சிங்கள காணிகளும் சுவீகரிக்கப்படுகின்றன – விக்கிரமபாகு கருணாரத்ன
தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் அரசு அங்கு சிங்களவர்களை குடியமர்த்துவதாக சிங்கள மக்கள் நினைக்கின்றனர். ஆனால் சிங்கள மக்களின் காணிகளை சுவீகரித்து ஒட்டுமொத்த நாட்னையுமே வெளிநாடுகளுக்கு அரசாங்கம் விற்பனை செய்கின்றதென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று சிங்கள மக்களின் சொத்துக்களும் தற்போதைய ஆட்சியாளர்களால் அழிக்கப்படுகின்றன. மக்களின் உரிமைக்காகவும் அவர்களின் நலனுக்காகவும் குரல் கொடுப்பவர்களை அரசு பயங்கரவாதிகள் என்று கூறி அவர்களின் செயற்பாடுகளை முடக்கப் பார்க்கின்றது.
வடக்கில் பொது மக்களின் காணிகளை சுவீகரித்து அங்கு சிங்கள மக்களை குடியமர்த்துவதாக சிங்கள மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் தென்பகுதியிலுள்ள சிங்கள மக்களின் காணிகளும் அபகரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் நிறைவேற்றாது அதனை மாற்றியமைக்க அரசாங்கம் திட்டம் தீட்டுகின்றது.
எவ்வாறான சூழ்ச்சிகளை அரசாங்கம் மேற்கொண்டாலும் சர்வதேசத்தின் அழுத்தங்களில் இருந்து தப்பிக்க முடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply