மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கான வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு
மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட உறுகாமத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ கலந்துகொண்ட இந்திய வீட்டுத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் துண்டுப்பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. உறுகாமம் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
உறுகாமம் வாழ் தமிழ் மக்கள் என்ற பெயரில் இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு உறுகாமம் பகுதியில் இருந்து சில முஸ்லிம்கள் வெளியேறிய நிலையில் அவர்களுக்கு ஏறாவூரில் சதாம் உசைன் கிராமம் என்ற பெயருடன் புதிய கிராமம் உருவாக்கப்பட்டு வீடுகள் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மீண்டும் உறுகாமம் பகுதியில் வீடுகள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளதை கண்டித்தே இந்த துண்டுப்பிரசும் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ் மக்கள் செறிந்துவாழும் உறுகாமம் பிரதேசத்தை முஸ்லிம் பிரதேசம் என சில ஊடகங்கள் வெளியிட்டுவரும் கருத்துக்கு கிழக்கிலங்கை தமிழ் மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
உறுகாமம் பகுதியில் கடந்த காலத்தில் மீன்பிடி உட்பட சேனைப்பயிர்ச்செய்கைக்கு வந்து தற்காலிகமாக தங்கியிருந்த முஸ்லிம் சகோதரர்களே யுத்த காலத்தில் அங்கிருந்து வெளியேறியதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் அவர்களுக்கு ஏறாவூரில் தனி கிராமம் அமைக்கப்பட்டு வீட்டுத்திட்டம் உட்பட பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மீண்டும் வீடு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் குடும்பம் இரு வீடுகளை பெறமுடியுமென்றால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒரு வீடாவது வழங்கவேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறுத்தியுள்ளது.
இதனை இனவாத கண்னோட்டத்துடன் நோக்காமல் திறந்த மனதுடன் சிந்திக்கவேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply