13வது திருத்தச் சட் டத்திற்கு அமைவாக வட மாகாண சபைக்கான தேர்தல்!
வட மாகாண சபைக்கான தேர்தல் 13வது திருத்தச் சட் டத்திற்கு அமைவாகவே நட த்தப்படும் என அமைச்சர வைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நடை பெற்றன. அதன் பிரகாரமே வட மாகாண சபைக்கான தேர்தலும் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங் களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நார ஹேன்பிட்டியிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை இடம்பெற்றது.
அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
இலங்கையின் அரசியலமைப்புக்கமைய 13வது திருத்தச் சட்டமே தற்போது நடைமுறையில் உள்ளது. அவற்றில் எந்தவித மாற்றங்களும் கிடையாது. எனவே கிழக்கை போன்றே வடக்குத் தேர்தலும் நடத்தப்படும் என்பதே அரசின் தற்போது வரையிலான நிலைப்பாடாகும்.
பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலமே அரசியலமைப்புக்கான திருத்தங்களை பிரேரிக்க முடியும் என்பதை சகல சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார். மாகாண சபை முறை தொடர்பில் ஆரம்பத்திலிருந்து சில அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவிக்கவில்லை. மாறுபட்ட கருத்துக்களையும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் கூறிவருகின்றனர்.
ஒவ்வொரு அரசியல் கட்சிகள் கூறிவருவது அவர்களது தனிப்பட்ட கருத்துக்களே தவிர அரசியல் நிலைப்பாடல்ல. எனவே எந்த ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவே மிகவும் பொருத்தமானது. இதற்கு விரிவான பேச்சுவார்த்தை அவசியம். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு வராமல் சகல சந்தர்ப்பங்களையும் புறக்கணித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி கொள்கையில் உள்ளது. இந்நிலையில் சில விடயங்கள் சாத்தியப்படுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலும் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமையவே நடைபெற்றது. அவ்வாறாயின் த. தே. கூட்டமைப்பு கிழக்கு தேர்தலைப் புறக்கணித்திருக்க வேண்டும். மாறாக அவர்களும் போட்டியிட்டனர் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply