LLRC பரிந்துரைகளை அமுல்படுத்த ஆதரவளிக்கத் தயார் : ஐ.தே.க
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் அரசாங்கம் சாதமான வழிமுறைகளை பின்பற்றினால், ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த கட்சியின் ஆதரவு வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையிலான சந்திப்பு ரணில் விக்ரமசிங்கவின் வாசஸ்தளத்தில் நடைபெற்றது.
ஜனநாயகத்தை நிலைநாட்டவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய ஊடக சுதந்திர நிலைமை குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை மேலும் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டுமென நிஷா பிஷ்வால் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply