தமிழர்களை சித்திரவதைக்கு உட்படுத்தவா அரசாங்கம் யுத்தத்தை நிறைவு செய்தது : மங்கள

தமிழ் மக்களை சித்திரவதைக்கு உட்படுத்தவா அரசாங்கம் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்தது. விடுதலைப் புலிகளை விடவும் மோசமான  தீவிரவாதத்தை மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் செய்கின்றது என ஜக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமர வீர தெரிவித்தார். பொதுநலவாய அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வை உடனடியாக நீக்க வேண்டும். இதனை வலியுறுத்தி பொது நலவாய அமைப்பின் நிறைவேற்றுக்குழுவிற்கு கடிதம் அனுப்புவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜக்கிய தேசியக்கட்சியினால் நேற்று ஸ்ரீ கொத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்  பிரபாகரன் வடக்கைக் கைப்பற்றி தனது ஆட்சியில் வைத்திருந்தபோது தமிழ் மக்கள் சித்திரவதைகள்  அனுபவித்ததை நாம் அன்று பார்த்துக்கொண்டிருந்தோம். ஆயுத முனையில் விடுதலைப்புலிகள் வடக்கை தக்க வைத்து மோசமான  ஆட்சியினை வடக்கில் நடத்தினர். ஆனால், இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான இராணுவ உயிர்களை தியாகம் செய்து தமிழ் மக்களை வடக்கில் இருந்து காப்பாற்றினார். ஆனால், இன்று அது தலைகீழாக  மாறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply