நாம் ஏனைய மதங்களையும் கலாசாரங்களையும் மதிப்பவர்கள் :ஞானசார தேரர்

அப்பாவி இந்துக்களை மத மாற்றும் நடவடிக்கையில் மதத் தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர். அப்பாவி பெளத்த மற்றும் இந்துக்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாட்டினையும் நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என பொதுபல சேனா பெளத்த அமைப்பு தெரிவித்தது. பெளத்த நாட்டில் எவருக்கும் அடிபணிய நாம் தயாராக இல்லை. ஒரு சொட்டு இரத்தம் உடலில் இருக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும் எனவும் அவ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுபல சேனா பெளத்த அமைப்பினால் செய்தியாளர் சந்திப்பின் போதே அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் தற்போது பெளத்த சிங்கள மற்றும் இந்து மதத்தவர்களுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது. கிறிஸ்தவ அமைப்புக்கள் நாட்டில் பாரிய அளவில் மதம் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை தற்போதைய நிலைமையில் கொழும்பில் மாத்திரம் 1 இலத்திற்கும் அதிகமான இந்துக்களும் பெளத்தர்களும் கட்டாயத்தின் பெயரில் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இவை தொடர்பில் போராட எந்தவொரு அமைச்சர்களும் முன் வருவதில்லை.

நாம் மட்டுமே இன்று மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். நாம் கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

மத விவகாரங்களுக்கான பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளமை நல்ல விடயமே. ஆனால் இது நிரந்தரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply