இந்தியா–இலங்கை மீனவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதற்கு தீர்வுகாண இருநாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தியா– இலங்கை மீனவர்கள் முதல்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்தது. அதன்பிறகு இருநாட்டு மீனவர்கள் இடையே மார்ச் மாதம் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை 2 முறை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா– இலங்கை மீனவர்கள் இடையே வருகிற 12–ந் தேதி கொழும்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதை இலங்கை மீன்வளத்துறை மந்திரி ரஜிதா செனரத்னே தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறும்போது, இந்தியா – இலங்கை நாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply