வறுமையில் வாடும் மக்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியை பயன்படுத்த மோடி அறிவுறுத்தல்
வறுமையில் வாடும் மக்களுக்கு உதவும் வகையில், பிரதமரின் நிவாரண நிதியை பயன்படுத்த வேண்டும் என நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், குஜராத் மாநிலத்தைப்போன்று நிவாரண நிதியை ஆக்கப்பூர்வமாக செலவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக ஏழை மக்கள், குழந்தைகள், அரசு மருத்துவமனை நோயாளிகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். உதவி கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறிய பிரதமர், அவசர நிலை அடிப்படையில் பயனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதேபோன்று, நிவாரண நிதியைப் பெறும் பயனாளிகளுக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்றும், நிதியை வழங்குமுன் குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்த வேண்டும் எனவும் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply