மூன்று வயது குழந்தை நிலத்தை அபகரித்ததாக புகார்: பாகிஸ்தான் நீதிமன்றத்தில் பரபரப்பு

pksபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 3 வயது குழந்தை மீது நில அபகரிப்பு மற்றும் திருட்டுப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து அங்குள்ள தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, வணிக வளாகம் ஒன்றிற்குச் சொந்தமான இடத்தை அபகரித்ததாகவும், அங்கு இருந்த பொருட்களைத் திருடியதாகவும் கொடுக்கப்பட்ட புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார், சற்றும் மூளையை உபயோகிக்காமல் 3 வயது குழந்தையையும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் ஜாமீன் கோரி நேற்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தை அணுகினர். இந்த மாபெறும் தவறு குறித்து அறிந்த நீதிமன்றம் போலீசாரைக் கடுமையாகக் கண்டித்ததோடு, நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு இஸ்லாமாபாத் நகர போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் லாகூரில் 9 மாதக் கைக்குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply