தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகிறார் ஸ்டாலின்

karunaதமிழக சட்டப்பேரவை திமுக குழுத் தலைவராக அக்கட்சியின் பொருளாளரும், கொளத்தூர் தொகுதி உறுப்பினருமான மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவர் தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராக செயல்படுவார்.செவ்வாய்க்கிழமை காலை, திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக சார்பில் வெற்றி பெற்ற 89 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டம் திமுக பொது செயலாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சட்டப்பேரவை திமுக குழு தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி, தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் செயல்படுவார்.

அதேபோல், சட்டப்பேரவை திமுக குழு துணைத்தலைவராக துரைமுருகனும், கொறடாவாக அர. சக்கரபாணியும், துணைக் கொறடாவாக கு. பிச்சாண்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதில், திமுக கூட்டணிக் கட்சியினருக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்பட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 13 முறை போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்ற திமுக தலைவர் கருணாநிதிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்

சட்டப்பேரவை தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிமுகவுக்கு ஆதரவாகவும், பாரபட்சமாகவும் இருந்தன என்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான செயல்பாடுகள் என்றும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு என்பதே இனி இல்லை என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டுமென்று என்பதை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்கள் விவகாரத்தில், தமிழக அரசே நேரடியாக வழக்குத் தொடுத்து, நீதி நிலைநாட்டப்படுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர் நகருக்கு அருகில், அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக்கமான அன்புநாதன் என்பவர் வீட்டில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் திருப்பூர் அருகே மூன்று கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் செயற்குழுவி்ல் வலியுறுத்தப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply