ஜி 7 மாநாடு இன்று ஆரம்பம்; ஜனாதிபதி ஜப்பான் பயணம்

maithreeஜப்பானில் நடைபெறும் ஜி7 நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டுடன் இணைந்ததாக நடைபெறும் கூட்டத்தில் பங்கு பற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(25) பிற்பகல் ஜப்பான் பயணமானார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜப்பானுக்கு புறப்பட்டனர்.

 

ஜி7 மாநாட்டின் தற்போதைய தலைவரான ஜப்பான் பிரதமர் சிங்சோ அபேயின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஜி 7 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கை நாட்டின் அரச தலைவர் ஒருவருக்குக் கிடைக்கப்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பு இதுவாகும். இம்மாநாடு இன்று 26, நாளை 27 ஆம் திகதிகளில் ஜப்பானின் சிசாகி நகரத்தில் நடைபெறுகிறது.

 

சமாதானம், சுபீட்சத்திற்கான சிறந்த வழியைக்காட்டும் சுதந்திரம், ஜனநாயகம், சட்ட ஆட்சி, மனித உரிமைகளின் அடிப்படைப் பெறுமானங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய நோக்கங்களுடன் இம்முறை ஜி 7 மாநாடு நடைபெறுகின்றது.

 

சம்பிரதாயபூர்வமான ஜி7 நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக பூகோள பொருளாதாரம், வெளிநாட்டுக்கொள்கை, தேசிய பாதுகாப்பு, பூகோள சுகாதாரம், பெண்களை வலுவூட்டுதல் ஆகிய விடயங்களுக்கு இதில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply