எனது ராஜ தந்திரத்தால்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது: வைகோ

vaikoதிருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வாளாடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், விவசாய கடன் தள்ளுபடியை, அறிவித்தபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது,

என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கலைஞர் நினைத்து கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜ தந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது.

இந்த நிமிடம் வரை நமது இயக்கத்தை அழிக்க நினைத்து நிர்வாகிகளை இழுத்து வருகின்றார்கள். நம்மை அழிக்க நினைத்தார்கள், அவர்கள் அழிந்து போய்விட்டார்கள். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள், உங்களுக்காக நான் இருக்கிறேன். இதுதான் நமது இயக்கத்தின் பிணைப்பு. நான் எப்போதும் கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை கைவிடமாட்டேன்.

தேர்தலில் வெற்றி தோல்விகள் வரலாம், போகலாம். ஆனால், ஆட்சி அதிகாரம் பதவிகள் எதுவும் இல்லாத போதும் மக்களுக்காக பாடுபடுகிற ஒரே இயக்கம் ம.தி.மு.க. மட்டும்தான். முல்லைப்பெரியாறு, இலங்கை தமிழர் பிரச்சனை, மது ஒழிப்பு பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளில் நாம் தான் உறுதியாக போராடி வருகின்றோம். இதை கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறிதிகளாகவும் கூறியிருந்தோம்.

தமிழக மக்கள் எங்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி, ஆட்சி அதிகாரம், பதவிகளை வழங்கினால், இதைவிட 100 மடங்கு மக்களுக்காக பாடுபடுவோம். தேர்தல் அரசியலில் மட்டுமல்லாமல் மக்கள் போராட்டங்கள் என பலவற்றில் இதுவரை விலைபோகாது இயக்கம் தமிழகத்தில் உள்ளது என்றால் அது ம.தி.மு.க. மட்டும்தான்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாம் பாடுபடுவோம். வெற்றி கிடைக்காவிட்டாலும் காத்திருப்போம். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பணத்திற்கு அடிபணிய மாட்டார்கள். சேவை செய்பவர்களை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து எந்தெந்த பதவிகளில் போட்டியிடுவதும் என முடிவு செய்யப்படும்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply