தாக்குதல் சம்பவங்களை கொண்டு அகதிகள் கொள்கையை மாற்ற முடியாது: ஜெர்மன் அதிபர் ஏஞ்சலே மார்கல் திட்டவட்டம்

angelaசிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் சூழல் காரணமாக அந்நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மேற்குலக நாடுகளை நோக்கி அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர். இந்த அகதிகள் ஏற்பது தொடர்பாக விவாதம் மேற்குலக நாடுகளில் முக்கியமான ஒன்றாக தற்போது உருவெடுத்துள்ளது. அதில் ஜெர்மனி அரசு அகதி கொள்கையை உருவாக்கியுள்ளது. அதன்படி லட்சக்கணக்கான அகதிகளை நாட்டில் அனுமதிக்க வகை செய்யும்.

 

இருப்பினும் தற்பொழுது அந்த கொள்கைக்கு ஜெர்மனியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு காரணம் மேற்குலக நாடுகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்றும் தாக்குதல்களில் அகதிகள் ஈடுபட்டு வருவது தான். இதனால் அகதிகள் கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளது.

 

இந்நிலையில், மேற்குல நாடுகளில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்களை கருத்தில் கொண்டு, அகதிகள் கொள்கையை மாற்ற முடியாது என்று ஜெர்மன் அதிபர் ஏஞ்சலே மார்கல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மார்கல், “தாக்குதல்களில் ஈடுபடுவர்கள் அகதிகளுக்கு உதவி செய்யும் எண்ணத்திற்கு கேடு விளைவிக்க விரும்புகிறார்கள்.

 

தாக்குதல் சம்பவங்களால் மக்களின் கருத்துக்கள் சிதைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அகதிகள் கொள்கையை நிறைவேற்ற முடியும் என்று இன்றும் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply