ஆஸ்திரேலியா: பொழுதுப்போக்கு பூங்காவில் பயங்கர விபத்து : 4 பேர் பலி

austaliyaஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லேன்ட் மாநிலத்தில் சுற்றுலாவாசிகள் அதிகமாக வருகைதரும் கோல்ட் கோஸ்ட் நகரின் கூமோரா பகுதியில் ’டிரீம் வேர்ல்ட்’ என்னும் பிரபல தீம் பார்க் ஒன்று அமைந்துள்ளது.இந்த பூங்காவில் உள்ள முக்கிய பொழுதுபோக்கு அம்சமான ’தன்டர் ரிவர் ரேபிட் ரைட்’ என்னும் அலையடிக்கும் ஆற்றுநீரில் பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை குகைகள் மற்றும் மரப்பாலங்களை கடந்து ஆறுபேர் அமர்ந்து செல்லும் பரிசல் சவாரி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் இந்த ’தன்டர் ரிவர் ரேபிட் ரைட்’ சவாரியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் உள்ளூரை சேர்ந்த நான்குபேர் பலியானதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்த விபத்தையடுத்து, ’டிரீம் வேர்ல்ட்’ பொழுதுப்போக்கு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் ஏராளமான மீட்புப்படை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்லும் பரப்பான காட்சிகளை சில ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.

மேலும் நான்குபேர் காயமடைந்த இந்த விபத்துக்கான காரணம் மற்றும் விளக்கம் ஏதும் தெளிவாக வெளியிடப்படாத நிலையில் குவீன்ஸ்லேன்ட் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply