புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பி : மூவரின் மறியல் நீடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்குமான விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் அருனி ஆர்டிகல இன்றைய தினம் உத்தரவு பிறப்பித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியை சூட்சுமமான முறையில் லண்டனுக்கு அனுப்ப முயற்சித்த குற்றச்சாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர் உட்பட மூவர் கடந்த வருடம் கொழும்பு நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் கொரியர் நிறுவனத்தினூடாக லண்டனுக்கு அனுப்ப முயற்சித்த குற்றத்திற்காக குறித்த மூவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் ஊடாக வழக்கு தொடரப்பட்டதோடு தற்பேர்த குறித்த மூவர் சார்பிலும், பிணை மனுத்தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விாரணை இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

பிணை வழங்கப்படாத நிலையில் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply