ஐ.எஸ். தீவிரவாதிகளை குறி வைத்து சிரியா மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. அவர்களை ஒடுக்க அமெரிக்காவின் கூட்டு படைகள் முகாமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சிரியா மீது ஈரான் நேற்று திடீரென ஏவுகணைகளை வீசி தாக்கியது. மேற்கு மாகாணங்களான கெர்மான்ஷா மற்றும் குர்திஸ்தானில் இருந்து வீசப்பட்டது. இங்கிருந்து வீசப்பட்ட ஏவுகணைகள் டெர்ல்-ஷோயுர் நகரம் மீது விழுந்தது. இவை ஷோல் பாகர் ரக ஏவுகணையாகும். இந்த ஏவுகணை தாக்குதலினால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த ஏவுகணைகள் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறி வைத்து வீசப்பட்டன. இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் ஒரு நாட்டின் மீது ஈரான் அணு ஆயுத தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறையாகும்.

அதே நேரத்தில் உள்நாட்டு போரில் சிக்கி தவிக்கும் சிரியா மீது தாக்குதல் நடத்துவதும் இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது. இத்தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல அமெரிக்கா மற்றும் சவுதி அரோபியாவுக்கு மறைமுக எச்சரிக்கை என உலக நாடுகள் கருதுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply