தினமும் காபி குடித்தால் நீண்ட நாள் உயிர் வாழலாம்: ஆய்வில் புதிய தகவல்

அதிக அளவில் காபி குடித்தால் பித்தம் அதிகரித்து உடல் நலக்குறைவு ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் தினமும் காபி குடித்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர் பேராசிரியர் வெரோனிகா டபிள்யூ செடியாவன் இது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

2 லட்சத்து 15 ஆயிரம் பேரிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் காபி குடிப்பவர்களுக்கு உயிர் கொல்லி நோய்களான இருதய நோய், புற்று நோய், கல்லீரல் நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் மிகவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இவர்களால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் காபியில் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் எனப்படும் நச்சு தன்மை எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உள்ளது. இது புற்றுநோய் உள்ளிட்ட இதர நோய்கள் வராமல் தடுக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகவல் மருத்துவ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply