பன்னாட்டு விமான சேவைகளை பலாலியில் ஆரம்பிக்க வேண்டும் :ஈ.சரவணபவன்

யாழ் மாவட்டத்தில் சுங்கத்திணைக்கள பணிமனை திறக்கப்பட்டுள்ள நிலையில் பலாலியில் இருந்து பிறநாடுகளுக்கான நேரடி விமான சேவையையும் ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். சுங்கத்திணைக்களத்தின் உபஅலுவலகம் நேற்று காங்கேசன்துறையில் திறக்கப்பட்டது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கிலிருந்து நேரடியான விமானசேவைகள் இடம்பெறும் போதுதான் மக்கள் இந்த அலுவலகங்கள் ஊடான முழுப்பயனையும் பெற்றுக்கொள்ள முடியும். மயிலிட்டி துறைமுகம் ஒருகாலத்தில் இந்த நாட்டின் மொத்த கடல் உற்பத்தியின் 43 வீதத்தை தன்னகத்தே கொண்டிருந்தது. இப்போது அந்தப் பிரதேசம் அழிவடைந்துள்ளது. மீ;ன்களை ஏற்றுமதி செய்து வந்த மீனவன் தற்போது தனது உணவுக்கு மீன்களை விலைகொடுத்து வாங்கும் நிலையில் இருக்கின்றான். அந்தபகுதி மீனவர்களின் தேவைகள் நிறைவு செய்யப்படவேண்டும். மயிலிட்டி துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படவேண்டும்.

வுடமாகாணத்தல் பெரிய தொழிற்சாலைகள் நிறுவனங்கள் அமைக்கப்பட்டு அதன் உற்பத்திகள் இந்த துறைமுகங்களின் ஊடாக ஏற்றுமதி செய்யப்படவேண்டும். அதன்மூலமே பொருளாதார அபிவிருத்தியையும் வேலைவாய்ப்பையும் பெற்று மேம்பாட்டை எட்ட முடியும். அவ்வாறான தொழிற்சாலைகள் தற்போது இங்கு இல்லை. அவற்றை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply