விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உடலை பார்த்தபோது வேதனையாக இருந்தது -ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று நடைபெற்ற அம்மாநில வர்த்தகர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசியதாவது:-

2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை பாரதீய ஜனதா தோற்கடித்தது. நான் அதிகமாக கற்றுக்கொள்வதற்கு இந்த தோல்வி உதவியாக இருந்தது. அந்த அடிப்படையில் பாரதீய ஜனதா எனக்கு உதவி செய்துள்ளது.

பிரபாகரன் உடல்

எனது குடும்பம் எப்போதும் காந்தியின் கொள்கைகளின் மீது பற்றுள்ள குடும்பம். இருந்தபோதிலும் எனது தந்தை ராஜீவ் காந்தியை கொன்றவர்களான விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை படத்தில் பார்த்தபோது மிகுந்த வேதனையாக இருந்தது.

இதுபற்றி பிரியங்காவிடமும் எனது சோகத்தை பகிர்ந்துகொண்டேன். அவரும் என்னைப்போலவே மிகுந்த வேதனை அடைந்ததாக கூறினார். இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளை நிர்வாக நடைமுறை ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது. ஒருவர் புதிதாக ஏதாவது செய்ய விரும்பினால், 50 பேர் அதை பின்னுக்கு இழுக்க தயாராக உள்ளனர்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

அதன்பின்னர் பல்வேறு இடங்களில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்து பேசினார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply