உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னடைவு

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் சற்று பின்னடைவாகவே உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஈவினை புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நிகழ்ந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இத் தேர்தலில் மக்கள் வாக்களித்திருப்பது வேலை வாய்ப்பு, மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்த அவர்களது வாக்குறுதிகளுக்காகவேயாகும்.

தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவை சமாந்தரமான இரு வழிகளாக இருக்கவேண்டும் என்பது தனது கருத்தாக இருக்கின்ற போதிலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பல விதமான பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இரண்டாம் பட்சமாக கருதிவிட்டது என்றும் மக்கள் அவற்றை முதல் பிரச்சினையாக கருதுவதையே தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகளும் இனி சிரமமானதாகவே இருக்கும் எனவும் மேலும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply