புதிய திட்டங்களை வகுத்து பயணத்தை தொடர அரசு உறுதி

உள்ளூராட்சித் தேர்தலில் தோல்வியானது கசப்பானதாக இருந்தாலும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். என்றாலும் அதனை சரி செய்துகொண்டு குறைகளை களைந்து சரியான பாதையில் பயணிக்கவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது எனத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்ளூராட்சி சபைத் தேர்தலை வைத்து நாம் ஒளிந்தோடவேண்டிய அவசியம் கிடையாது என தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவேண்டிய திட்டங்களை வகுத்து எமது பயணத்தை தொடர அரசாங்கம் உறுதி பூண்டியிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்றுக் காலை இடம்பெற்ற ஐ.தே. கட்சியின் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டத்திலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

கட்சியின் அமைச்சர்கள், முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கான விசேட வேலைத் திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கோருவதற்காகவே இந்த கூட்டம் இடம்பெற்றது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

கடந்த காலத்தில் நாம் முன்னெடுத்த பணிகள் தொடர்பில் மக்கள்

திருப்திகொள்ளவில்லை என்பதையே உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகள் எமக்கு காட்டுகின்றது. உலகின் பல நாடுகளிலும் இதுபோன்ற தேர்தல்கள் நடத்தப்படுவது மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காகவே. அதன் பிரகாரம் மக்கள் எமது செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கின்றார்களா? அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்களா? என்பதை அறிந்துகொள்வதாகும்.

இதுபோன்ற தேர்தல்களை ஒரு அலவுகோளாகவே மட்டும் எடுத்துக்கொள்ள முடியும். இத்தேர்தல் முடிவை வைத்து ஆட்சியை கைவிட்டு ஓடவேண்டிய அவசியம் கிடையாது.

எனக்கு ஒரு உதாரணத்தை கூறமுடியும். அமெரிக்க சட்டத்திற்கமைய அங்கு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இரண்டு வருடங்களை அடுத்து மக்கள் பிரதிநிதிகள் சபை மீண்டும் தெரிவு செய்யப்படும். ஏனைய நாடுகளில் மாகாண மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் மூலம் இந்த மக்களின் மனநிலை அறியும் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதற்கமைவாகவே எமது நாட்டில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். அதன் முடிவுகளை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

அரசாங்கம் என்ற அடிப்படையில் மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்ற முடியாது போனதை நாம் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். ஆனால் கடந்த காலத்தை நோக்கும்போது நாம் எதுவுமே செய்யவில்லையென யாராலும் கூறமுடியாது. பல பணிகளை முன்னெடுத்துள்ளோம். அவற்றின் வேகம் குறித்து திருப்தியடையமுடியாது. மற்றும் சில பணிகள் குறித்து பிரச்சினை இருக்கின்றது. எனவே இந்த தேர்தல் முடிவுகளை கவனத்திற்கொண்டு அந்த குறைபாடுகளையும் தவறுகளையும் திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல நாம் தீர்மானித்துள்ளோம்.

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கத்தின் அமைச்சு பொறுப்புக்களின் மாற்றம் ஏற்படும் என்பதை தெரிவிக்கிறேன். இந்த மாற்றங்களுடன் சேர்த்து அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தவேண்டியுள்ளோம்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதோடு ஐ.தே. கட்சியினராகிய நாம் புதிய தலைமைத்துவப் பரம்பரையை உருவாக்குவதற்கும் நாம் உறுதிபூண்டு இருக்கின்றோம். அந்த தலைமைத்துவ பரம்பரை அமைச்சர்களுக்குள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ளும், மாகாண சபை உறுப்பினர்களுக்குள்ளும் இருக்கிறார்கள்.

முதலில் அரசாங்கத்தின் கொள்கை குறித்தே நாம் கவனம் செலுத்த வேண்டும். ஐ.தே. கட்சியை பிரதிநிதித்தவப்படுத்தும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவை இங்கு அழைத்து எங்களது கொள்கை மற்றும் அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தி எதிர்காலத்திற்காக மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் என்ன, நாங்கள் கடும் தீர்மானங்களை எடுக்கும் பாதையில் பயணிப்பதா? என்பதை தீர்மானிப்பதே ஆகும்.

மக்கள் எங்களுக்கு ஒரு ஆணையை பெற்றுத் தந்திருக்கிறார்கள். எப்போதும் அந்த ஆணைக்கமையவே நாம் செயற்படவேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த கட்டமைப்புக்கு வெளியே நாம் போகமுடியாது. அதற்கமைய அந்த கட்டமைப்புக்குள் எங்களால் தேவையான திருத்தங்கள் நாம் பயணிக்கவேண்டிய வேகம், எமது தவறுகள் குறைபாடுகள் போன்றவற்றை திருத்தி அமைத்துக்கொண்டு புதிதாக என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நாங்கள் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

சம்பிரதாயப்பூர்வமாக எமது செயற்பாடுகள் ஒப்படைக்கப்படுவது மூத்தவர்களுக்கே ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் புதிய தலைமைத்துவ சந்ததியை உருவாக்கப்போவதால் இந்த அமைச்சர்களுக்கே எதிர்காலத்தில் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்காக அவர்களுடைய ஆலோசனைகளை பெற்றுத் தருமாறு அவர்களிடம் பொறுப்பு ஒப்படைத்துள்ளேன்.

இதன் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் ஆலோசனைகளை ஜனாதிபதியுடனும் ஏனைய அமைச்சர்களிடமும் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன். உங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது குறுகிய காலம் தான். இக்காலத்திற்கிடையில் இந்த கருத்துக்கள், ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை எதிர்பார்க்கின்றேன்.

இது ஐ.தே. கட்சி பயணிக்கும் புதிய பாதையின் ஒரு பகுதியாகும். கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாகவும் குழுவொன்றை அடுத்தவாரம் நியமிக்கவுள்ளேன். ஒரு மாதத்திற்குள் இந்த பணிகளை முடித்துக்கொண்டு முன்னேறிச் செல்வதே எமது இலக்காகும்.

மக்களின் எதிர்பார்ப்பு இன்னமும் அப்படியே இருக்கின்றது. அந்த எதிர்பார்ப்புக்கு புறம்பாக யாராலும் பின்நோக்கிச் செல்லமுடியாது. எங்களுக்குள் பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக நாம் எமது செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட இடமளிக்க முடியாது.

நான் முன்னெடுத்திருக்கும் இந்த திட்டம் எதிர்காலத்தை நோக்கிய இலக்கு நோக்கிய பயணத்தில் மிக முக்கியமானதென்பதை சொல்லிவைக்க விரும்புகின்றேன் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். திருப்திகொள்ளவில்லை என்பதையே உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகள் எமக்கு காட்டுகின்றது. உலகின் பல நாடுகளிலும் இதுபோன்ற தேர்தல்கள் நடத்தப்படுவது மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காகவே. அதன் பிரகாரம் மக்கள் எமது செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கின்றார்களா? அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்களா? என்பதை அறிந்துகொள்வதாகும்.

இதுபோன்ற தேர்தல்களை ஒரு அலவுகோளாகவே மட்டும் எடுத்துக்கொள்ள முடியும். இத்தேர்தல் முடிவை வைத்து ஆட்சியை கைவிட்டு ஓடவேண்டிய அவசியம் கிடையாது.

எனக்கு ஒரு உதாரணத்தை கூறமுடியும். அமெரிக்க சட்டத்திற்கமைய அங்கு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இரண்டு வருடங்களை அடுத்து மக்கள் பிரதிநிதிகள் சபை மீண்டும் தெரிவு செய்யப்படும். ஏனைய நாடுகளில் மாகாண மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் மூலம் இந்த மக்களின் மனநிலை அறியும் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதற்கமைவாகவே எமது நாட்டில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். அதன் முடிவுகளை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

அரசாங்கம் என்ற அடிப்படையில் மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்ற முடியாது போனதை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். ஆனால் கடந்த காலத்தை நோக்கும்போது நாம் எதுவுமே செய்யவில்லையென யாராலும் கூறமுடியாது. பல பணிகளை முன்னெடுத்துள்ளோம். அவற்றின் வேகம் குறித்து திருப்தியடையமுடியாது. மற்றும் சில பணிகள் குறித்து பிரச்சினை இருக்கின்றது. எனவே இந்த தேர்தல் முடிவுகளை கவனத்திற்கொண்டு அந்த குறைபாடுகளையும் தவறுகளையும் திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல நாம் தீர்மானித்துள்ளோம்.

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கத்தின் அமைச்சு பொறுப்புக்களின் மாற்றம் ஏற்படும் என்பதை தெரிவிக்கிறேன். இந்த மாற்றங்களுடன் சேர்த்து அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளோம்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதோடு ஐ.தே. கட்சியினராகிய நாம் புதிய தலைமைத்துவப் பரம்பரையை உருவாக்குவதற்கும் நாம் உறுதிபூண்டு இருக்கின்றோம். அந்த தலைமைத்துவ பரம்பரை அமைச்சர்களுக்குள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ளும், மாகாண சபை உறுப்பினர்களுக்குள்ளும் இருக்கிறார்கள்.

முதலில் அரசாங்கத்தின் கொள்கை குறித்தே நாம் கவனம் செலுத்த வேண்டும். ஐ.தே. கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவை இங்கு அழைத்து எங்களது கொள்கை மற்றும் அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தி எதிர்காலத்திற்காக மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் என்ன, நாங்கள் கடும் தீர்மானங்களை எடுக்கும் பாதையில் பயணிப்பதா? என்பதை தீர்மானிப்பதே ஆகும்.

மக்கள் எங்களுக்கு ஒரு ஆணையை பெற்றுத் தந்திருக்கிறார்கள். எப்போதும் அந்த ஆணைக்கமையவே நாம் செயற்படவேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த கட்டமைப்புக்கு வெளியே நாம் போகமுடியாது. அதற்கமைய அந்த கட்டமைப்புக்குள் எங்களால் தேவையான திருத்தங்கள் நாம் பயணிக்கவேண்டிய வேகம், எமது தவறுகள் குறைபாடுகள் போன்றவற்றை திருத்தி அமைத்துக்கொண்டு புதிதாக என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நாங்கள் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

சம்பிரதாயப்பூர்வமாக எமது செயற்பாடுகள் ஒப்படைக்கப்படுவது மூத்தவர்களுக்கே ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் புதிய தலைமைத்துவ சந்ததியை உருவாக்கப்போவதால் இந்த அமைச்சர்களுக்கே எதிர்காலத்தில் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்காக அவர்களுடைய ஆலோசனைகளை பெற்றுத் தருமாறு அவர்களிடம் பொறுப்பு ஒப்படைத்துள்ளேன்.

இதன் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் ஆலோசனைகளை ஜனாதிபதியுடனும் ஏனைய அமைச்சர்களிடமும் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன். உங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது குறுகிய காலம் தான். இக்காலத்திற்கிடையில் இந்த கருத்துக்கள், ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை எதிர்பார்க்கின்றேன்.

இது ஐ.தே. கட்சி பயணிக்கும் புதிய பாதையின் ஒரு பகுதியாகும். கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாகவும் குழுவொன்றை அடுத்தவாரம் நியமிக்கவுள்ளேன். ஒரு மாதத்திற்குள் இந்த பணிகளை முடித்துக்கொண்டு முன்னேறிச் செல்வதே எமது இலக்காகும்.

மக்களின் எதிர்பார்ப்பு இன்னமும் அப்படியே இருக்கின்றது. அந்த எதிர்பார்ப்புக்கு புறம்பாக யாராலும் பின்நோக்கிச் செல்லமுடியாது. எங்களுக்குள் பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக நாம் எமது செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட இடமளிக்க முடியாது. நான் முன்னெடுத்திருக்கும் இந்த திட்டம் எதிர்காலத்தை நோக்கிய இலக்கு நோக்கிய பயணத்தில் மிக முக்கியமானதென்பதை சொல்லிவைக்க விரும்புகின்றேன் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply