அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே

அடுத்­து­வ­ரும் ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கள­மி­றக்கி அவரின் வெற்­றிக்­காக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லுள்ளஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 39 பேரும் உழைக்­க­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான துமிந்த திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று அவர் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே இதனைத் தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஜனா­தி­பதித் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜ­ன­ பெ­ர­முன கள­மி­றக்­க­வுள்ள அபேட்­சகர் பற்றி அனை­வ­ருக்கும் தெரியும். எனவே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெ­றக்­கூ­டி­ய­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே உள்ளார். ஆகவே அவரைக் கள­மி­றக்­கு­வ­தற்கே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி எதிர்­பார்த்­துள்­ளது.

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற பின்னர் நாட்டில் பாரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். கடந்த காலங்­களில் சர்­வ­தேசம் எமது நாட்­டுடன் நல்­லு­றவைப் பேண­வில்லை. எனினும் அந்­நி­லைமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை அதிக விலைக்கு விவ­சாய உரம் விநி­யோ­கிக்கும் வர்த்­த­கர்கள் பற்றி விவ­சாய அமைச்­சுக்கு மக்கள் அறி­விக்க வேண்டும். அப்­போது அவ்­வா­றான வர்த்­த­கர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க முடியும். மேலும் விவ­சாய உரத்­திற்­கான தட்­டுப்­பாட்டை இல்­லாது செய்து கேள்­விக்கு ஏற்ப அதனை வழங்­கு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம்.

மேல­திக பயிர்ச்­செய்­கைக்­கான உரத்தை விவ­சாய மத்­திய நிலை­யத்­தி­னூ­டாக ஆயி­ரத்து ஐந்நூறு ரூபா­விற்கு வழங்­கப்­போ­வ­தில்லை.தனி­யா­ரி­ட­மி­ருந்தே மேல­திக பயிர்ச்­செய்­கைக்­கான உரத்தை ஆயி­ரத்து ஐந்நூறு ரூபா­விற்கு பெற முடியும். விவ­சாய மத்­திய நிலை­யத்­தி­னூ­டாக ஐந்து ஏக்கர் நெற் ­ப­யிர்ச்­செய்­கைக்­கான உரமே வழங்­கப்­படும்.

தனி­யா­ரி­ட­மி­ருந்து மேல­திக பயிர்ச்­செய்­கைக்­காக விவ­சா­யிகள் ஆயி­ரத்து ஐந்­நூறு ரூபா­விற்கு உரம் கொள்­வ­னவு செய்யும் போது அதற்­காக அர­சாங்கம் இரண்­டா­யிரம் ரூபா சலுகை விலையை தனி­யா­ருக்கு செலுத்­து­கி­றது. அத்­துடன் ஐந்து ஏக்கர் நெற்­செய்­கைக்­காக ஐந்­நூறு ரூபா­விற்கு வழங்­கப்­படும் உரத்­திற்­காக அர­சாங்கம் மூவா­யிரம் ரூபா சலுகை விலையை செலுத்­து­கி­றது.

எனவே மேலதிக பயிர்ச்செய்கைக்கான உரத்திற்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபாவிற்கு அதிகமான தொகையை வர்த்தகர்கள் அறவிடுவார்களாயின் அது குறித்து விவசாய அமைச்சின் 011 3036666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிடுமாறும் அவர் மேலும் கேட்டுகொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply