பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கத்தி குத்து! ஒருவர் உயிரிழப்பு!
பிரான்ஸில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட வெறித்தனமான கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.பிரான்ஸ் தலைநகர் பாரிசின் மையத்தில் அமைந்துள்ளது ஒபரா ஹவுஸ் கட்டிடத்தின் அருகே மர்ம நபர் ஒருவர் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பொலிசார் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கோரத்தாண்டவத்தில் ஈடுபட்ட அந்நபரை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply