இலங்கையில் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிட தகுதியானவர் ரணில்தான்: மங்கள சமரவீர
இலங்கையில் எதிர்வரும் 2020-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறக்கக்கூடிய தகுதியான வேட்பாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான உறுப்பினர்களுடனான சந்திப்பில் பங்கேற்று கருத்த வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கூட்டு எதிர்கட்சியைச் சேர்ந்த சிலருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அது நகைப்புக்குரிய விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 1998 மற்றும் 1999 காலப்பகுதியில் சந்திரிக்கா குமாரதுங்க இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சந்தர்ப்பத்தில் ‘ரணிலுக்கு முடியாது’ என்ற தலைப்பில் சுவரொட்டிகளை தாமே ஒட்டியதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
அந்த சந்தர்ப்பத்தில் எமக்கிருந்த சவால் ரணிலே எனக் குறிப்பிட்ட மங்கள சமரவீர, அவரால் முடியுமென நம்பியதாகவும் அதனாலேயே அவ்வாறு சுவரொட்டிகளை ஒட்டினோம் எனவும் மேலும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply