ரெலோ அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் கிருஸ்ரி குகராஜாவின் 19ம் ஆண்டு நினைவு அஞ்சலி

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் கிருஸ்ரி குகராஜாவின் 19வது ஆண்டு நினைவு அஞசலி இன்று நடைபெற்றது.வவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்னாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், தமிழ் ஈழ விடுதலை இயக்க முக்கயஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply