நைஜீரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் பலி

நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி பகுதியில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 86 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். 50-க்கு மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டுள்ளது என முதல் கட்டமாக தகவல் வெளியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.__

 

 

நைஜீரியாவில் நிலப் பிரச்னை தொடர்பாக பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையில் மோதல்கள் நடப்பது வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டில் இதுபோன்று நடைபெற்ற மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply