தேசிய அரசாங்கம் குறித்து வெட்கப்பட வேண்டும்: ஜே.வி.பி.

ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணையில் யாருடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப் போகின்றது என்பது குறித்து எதனையும் குறிப்பிடாதுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதில்லையென அறிவித்துள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், உத்தியோப்பற்றற்ற தகவல்களின் பிரகாரம் ஒரு உறுப்பினரைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே அரசாங்கத்துடன் இணைந்தே காணப்படுகின்றார். உண்மையில் இதனைப் பார்க்கும் போது வெட்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply