பாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்

பாகிஸ்தானில் போதை பொருள் கட்டுப்பாட்டு துறை மந்திரியாக இருந்தவர் சர்தார் அலி முகமது மஹர் (52). கடந்த 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை சிந்த் மாகாணத்தின் 25வது முதல் மந்திரியாகவும் இருந்தவர். சமீபத்தில் இவரது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் முசாபர்கார் மாவட்டத்தின் கான்கர் கிராமத்தில் வசித்து வந்த மஹர் திடீரென மாரடைப்பினால் இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்தனர்.

2018-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதை தொடர்ந்து அவர் மந்திரியானது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply