கன்னியா விவகாரம்: போராட்டத்திற்கு படையெடுக்கும் மக்கள்: படையினர் குவிப்பு

தமிழர்களின் மரபுரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென தெரிவித்து திருகோணமலையில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் படையெடுத்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்திற்கு வரும் மக்களிடம் கடும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், குறித்த பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் திருகோணமலையை நோக்கி படையெடுத்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் வந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் தீவிர பரிசோதனையிடப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தோடு, போராட்டம் இடம்பெறும் இடத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply