யாழில். மூளைக்காய்ச்சல் காரணமாக யுவதி உயிரிழப்பு

Tuesday, April 22nd, 2025 at 11:07 (SLT)

யாழ்ப்பாணத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். வலி. வடக்கு வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது 22) எனும் யுவதியே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பொலிஸாரை அவமதிக்கவும், மக்களை தவறாக வழிநடத்தவும் பரவும் கடிதம்

Tuesday, April 22nd, 2025 at 10:54 (SLT)

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

முஸ்லிம்கள் எவ்வித வெட்கமும் இன்றி NPP யில் போட்டி, ஜமாதே இஸ்லாமியை தடைசெய்ய வேண்டும் : ஞானசாரர்

Tuesday, April 22nd, 2025 at 10:51 (SLT)

சர்வதேச இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எம்மை விமர்சனம் செய்து, பாவத்தை சம்பாதிக்கின்றனர்: நிலந்தி கொட்டச்சி

Tuesday, April 22nd, 2025 at 10:45 (SLT)

எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விமர்சனம் செய்வதற்கு மதத்தை கையில் எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உர மானியத்திற்கான நிதி விடுவிப்பு

Tuesday, April 22nd, 2025 at 10:41 (SLT)

சிறுபோகத்திற்கான உர மானியங்கள் இன்றும் நாளையும் வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 09 மாவட்டங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

வன்முறையால் பாதிக்கப்பட்ட சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவருக்கும் நீதி வழங்க கோரிக்கை

Tuesday, April 22nd, 2025 at 10:38 (SLT)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல, உள்நாட்டுப் போரின் போது தமிழ் பொதுமக்கள், கிளர்ச்சிகளின் போது சிங்கள இளைஞர்கள் மற்றும் பாகுபாடு மற்றும் வன்முறையைச் சந்தித்த முஸ்லிம்கள் உட்பட அநீதிக்குள்ளான அனைத்து சமூகங்களுக்கும் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு முஸ்லிம் அமைப்புகள் கூட்டாக அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் : பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Tuesday, April 22nd, 2025 at 10:35 (SLT)

இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாக பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மீது விதித்த வரியின் உண்மையான விகிதம், தற்போது 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சில செயல்பாடுகள் வருத்தமளிக்கிறது: ஜீவன் தொண்டமான்

Tuesday, April 22nd, 2025 at 10:30 (SLT)

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சில செயற்பாடுகள் வருத்தமளிப்பதாகவும்.தேர்தல்கள் ஆணைக்குழு பாரபட்சம் காட்டுவதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் (21) தேர்தல் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

கனடாவில் இந்து கோவில் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்

Monday, April 21st, 2025 at 17:34 (SLT)

கனடாவிலுள்ள இந்து கோவில்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் சேதப்படுத்தியுள்ளனர். கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை கோவில் மீது நேற்று (20) காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்பது நீதிமன்றமே தவிர அரசியல்வாதிகள் அல்ல : டக்ளஸ் தேவானந்தா

Monday, April 21st, 2025 at 17:21 (SLT)

குற்றச்சாட்டுகள் யாருக்கு எதிராகவேனும் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிமன்றங்களும் நீதிக் கட்டமைப்புக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் இயற்கை எய்தினார்

Monday, April 21st, 2025 at 17:16 (SLT)

உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராணா பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் தனது 88 வது வயதில் வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள தனது இல்லத்தில் இன்றய தினம் இயற்கை எய்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவு

Monday, April 21st, 2025 at 7:47 (SLT)

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் வாசிக்க >>>

ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் நன்கு குழப்படைந்துள்ளனர் : பிரதமர்

Monday, April 21st, 2025 at 7:42 (SLT)

ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் இப்பொழுது குழப்படைந்துள்ளதுடன் அரசியல் ரீதியாக நிர்க்கதியானவர்களின் இறுதி தஞ்சம் இனவாதம் என்பதை உறுதிப்படுத்தி வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

Monday, April 21st, 2025 at 7:38 (SLT)

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1010 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

மேலும் வாசிக்க >>>

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர் கைது

Monday, April 21st, 2025 at 7:33 (SLT)

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>