ஈரானில் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரான் மீது தொடுத்த போர் காரணமாக, சுமார் 58 நாள்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஈரானின் வான்பரப்பு மற்றும் விமான சேவைகள் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

ஏப்ரல் 19 முதல் நான்கு கட்டங்களாக வான்பரப்பு திறக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 25 முதல் இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 இடங்களுக்கான சேவைகள் ஆரம்பமாகியுள்ளன.

துருக்கி (இஸ்தான்புல்), சீனா, ரஷ்யா, ஓமான் (மஸ்கட்) மற்றும் சவுதி அரேபியா (மதீனா) உள்ளிட்ட நாடுகளுக்கு உள்நாட்டு வானூர்தி நிறுவனங்கள் சேவைகளை வழங்கி வருகின்றன.

போருக்கு முன்பு நாளொன்றுக்கு 150 விமானங்கள் வரை இயக்கப்பட்ட நிலையில், தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்படுகின்றன.

வெளிநாட்டு விமான நிறுவனங்கள் ஈரானின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புச் சூழலை அவதானித்த பின்னரே மீண்டும் சேவைகளைத் தொடங்கவுள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply