நாட்டையும் மக்களையும் வெற்றி பெறச்செய்வதற்காக இந்தப் புத்தாண்டில் ஒரே நோக்கத்துக்காக ஒன்றுபடுவோம் : புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

Monday, April 14th, 2025 at 12:06 (SLT)

பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் கொண்டாடுகிறோம்.

மேலும் வாசிக்க >>>

எதிர்க்கட்சி தலைவரின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Monday, April 14th, 2025 at 12:03 (SLT)

இலங்கையர்களின் சிறப்பான கலாசார விழாவான சிங்கள தமிழ் புத்தாண்டுக்காக எமது நாட்டின் அன்பான மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என தனது சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ​தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புடனும், புதிய தொலைநோக்குடனும் வரவேற்க வேண்டும்:பிரதமர் ஹரிணி அமரசூரிய

Monday, April 14th, 2025 at 12:02 (SLT)

வளமான நாடு, அழகான வாழ்க்கை” க்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டு வரும் இவ்வேளையில், மலர்ந்துள்ள புத்தாண்டைப் புதிய எதிர்பார்ப்புடனும், புதிய தொலைநோக்குடனும் வரவேற்க வேண்டும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஓடும் ரயிலில் ஏறி காலை இழந்த வயோதிபர்

Monday, April 14th, 2025 at 11:59 (SLT)

ஓடும் ரயிலில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான ரிதிதென்னை புகையிர நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

எமது வாசகர்கள் அனைவருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரெலோ நீயூஸ்

Monday, April 14th, 2025 at 0:01 (SLT)

எமது வாசகர்கள் அனைவருக்கும் ரெலோ நீயூஸ் தங்களது தமிழ், சிங்கள புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

www.telonews.com


உக்ரைனில், இந்தியாவின் மருந்து கிடங்கின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் : இந்தியா கண்டனம்

Sunday, April 13th, 2025 at 13:19 (SLT)

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவன கிடங்கில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா வேண்டும் என்றே இந்திய நிறுவனங்களின் தொழில்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டியிருக்கிறது.

மேலும் வாசிக்க >>>

வரவு – செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக பயன்படுத்த உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்க முன்வாருங்கள் : பிரதமர் ஹரிணி

Sunday, April 13th, 2025 at 13:17 (SLT)

வரவு – செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

மேலும் வாசிக்க >>>

கொட்டாஞ்சேனையில் இரு பெண்களுடன் கடத்திச் செல்லப்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

Sunday, April 13th, 2025 at 13:14 (SLT)

நபரொருவரால் கொட்டாஞ்சேனையில் கடத்திச்செல்லப்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை (12) இரவு கொட்டாஞ்சேனையின் வாசல வீதியில், இயங்கும் நிலையில் தனது காரை நிறுத்திவிட்டு, உணவு வாங்குவதற்காக உணவகத்திற்குள் காரின் உரிமையாளர் சென்றுள்ளார். காரில் கர்ப்பிணியான மனைவியையும் தயாரையும் விட்டுச் சென்றுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இன்று குருத்தோலை ஞாயிறு

Sunday, April 13th, 2025 at 7:35 (SLT)

இன்றைய குருத்தோலை ஞாயிறில் அன்னையாம் திரு அவை இயேசுவின் எருசலேம் வருகையை நினைவு கூறுகின்றது. இதுவே பரிசுத்த வாரத்தின் தொடக்க நாளாகவும் இருக்கின்றது.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Sunday, April 13th, 2025 at 7:32 (SLT)

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மலேசியாவில் இலங்கையரும், அவரது நாயும் உயிரிழப்பு

Saturday, April 12th, 2025 at 12:55 (SLT)

மலேசியாவின் ஷா ஆலம், டமான் ஆலம் இண்டாவில் உள்ள கட்டுமானப் பொருட்கள் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் 27 வயதுடைய இலங்கை இளைஞர் என தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

28 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க ஆபரணங்களை அணிந்து வந்தவர்கள் கைது

Saturday, April 12th, 2025 at 12:53 (SLT)

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், இருவரும் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மனித புதைகுழிகளை தோண்டுவதற்கு இதுவரை இலங்கையின் எந்த அரசாங்கமும் 100 வீத ஆதரவை வழங்கவில்லை

Saturday, April 12th, 2025 at 12:49 (SLT)

மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் எந்த அரசாங்கமும் இதுவரை நூறு வீத ஆதரவை வழங்கவில்லை என தெரிவித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல், அரசாங்கங்களிடம் இது தொடர்பாக அரசியல் உறுதிப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி அநுர வியட்நாம் விஜயம்

Saturday, April 12th, 2025 at 12:45 (SLT)

சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார். உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு’ என்ற தொணிப்பொருளில் 2025 சர்வதேச வெசாக் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. சுமார் 80 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க உள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் : பிரதமர்

Saturday, April 12th, 2025 at 12:43 (SLT)

மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.

மேலும் வாசிக்க >>>