காசாவில் சோகம் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 21 பேர் பலி

Friday, November 18th, 2022 at 10:10 (SLT)

பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.

மேலும் வாசிக்க >>>

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கைக்கு திடீர் விஜயம்

Thursday, November 17th, 2022 at 13:32 (SLT)

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தனுஷ்கவுக்கு பிணை அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை : சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை மேலும் பல நிபந்தனைகள்

Thursday, November 17th, 2022 at 13:14 (SLT)

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த, இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றமொன்று இன்று பிணை வழங்கியது. கடுமையான நிபந்தனைகளுடனேயே தனுஷ்க குணதிலக்கவுக்கு நீதின்றம் பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க >>>

செட்டிகுளம் பெரியகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

Thursday, November 17th, 2022 at 13:10 (SLT)

செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் வீடொன்றுக்கு அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிரான்ஸில் இரண்டு ஈழத் தமிழர்கள் கைது

Thursday, November 17th, 2022 at 13:02 (SLT)

பிரான்ஸின் வடபகுதியிலிருந்து இல் து பிரான்ஸிற்கு சென்று கொண்டிருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேர்தன் (Verdun) சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கடந்த 8ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் பொட்டு அம்மானுக்குப் பிறகு முதல்நிலை குற்றவாளி நளினியே

Thursday, November 17th, 2022 at 8:12 (SLT)

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் உயிரிழந்ததன் பின்னர் நளினிதான் முதல்நிலை குற்றவாளி என முன்னாள் காவல்துறை அதிகாரி அனுசுயா தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈரானில் போராட்டக்காரர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

Thursday, November 17th, 2022 at 8:05 (SLT)

ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி, நேற்று இரண்டாவதாக ஒருவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.

மேலும் வாசிக்க >>>

வவுனியா புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 பேர் தப்பியோட்டம்

Wednesday, November 16th, 2022 at 13:43 (SLT)

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்று மாலை வடபகுதியைச் சேர்ந்த 5 பேர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வாருகின்றது.

மேலும் வாசிக்க >>>

அடுத்த வருடம் முதல் அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் ஒன்லைன் மூலம் செலுத்தப்படும் : ஜனாதிபதி

Wednesday, November 16th, 2022 at 13:29 (SLT)

அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

01.03.2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் மின்னணு முறையில் (ஒன்லைன்) வழங்குவதை கட்டாயமாக்க நான் முன்மொழிகிறேன், அந்தந்த பெறுநர்களுக்கான பண மானியங்கள் மற்றும் பொதுமக்களால் பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவதற்கான கொடுப்பனவுகள் உட்பட அனைத்தும் அடங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

2024-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டி

Wednesday, November 16th, 2022 at 13:19 (SLT)

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், தற்போதைய ஜோ பைடன் அரசு நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கிடையே 2024-ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வாசிக்க >>>

மனிதர்களை அனுப்பும் திட்டம்: நிலவுக்கு ராக்கெட்டை ஏவியது அமெரிக்கா

Wednesday, November 16th, 2022 at 13:16 (SLT)

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா முடிவு செய்தது. 2025ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை வடிவமைத்தது. முதற்கட்டமாக மனிதர்கள் இல்லாமல் ஆர்டெமிஸ்-1 என்ற ராக்கெட்டை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன. இப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து ராக்கெட்டை விண்ணில் ஏவ கடந்த ஆகஸ்டு மாதம் முடிவு செய்யப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

ரஷிய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலி : அமெரிக்காவுடன் போலந்து அதிபர் அவசர பேச்சுவார்த்தை

Wednesday, November 16th, 2022 at 7:26 (SLT)

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி படையெடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான இந்த போரில் இரு நாடுகளின் வீரர்களும் பெருமளவில் உயிரிழந்தனர். போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

மேலும் வாசிக்க >>>

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் பீடி இலை சிக்கியது

Wednesday, November 16th, 2022 at 6:35 (SLT)

தூத்துக்குடி கடலோர காவல்படையினர் நேற்றுமுன்தினம் கடலில் ரோந்து கப்பல் வஜ்ரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடியில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக 4 படகுகள் நின்று கொண்டு இருந்தன. இதனை கவனித்த கடலோர காவல்படையினர் விரைந்து சென்றனர்.

மேலும் வாசிக்க >>>

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு : இலங்கை கடற்படை

Wednesday, November 16th, 2022 at 6:30 (SLT)

ராமேசுவரத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானது : ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Tuesday, November 15th, 2022 at 19:42 (SLT)

ஜி-20 அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் உள்ள ஜலன் நுசாதுவாவில் இன்று தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளையும் ஐரோப்பிய கூட்டமைப்பையும் உள்ளடக்கிய அமைப்பாக ஜி-20 உள்ளது.

மேலும் வாசிக்க >>>