செட்டிகுளம் பெரியகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் வீடொன்றுக்கு அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

9 வயது சிறுவன் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுவன் தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த நிலையில், விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, தாயும், அப்பகுதி மக்களும் சேர்ந்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரியவந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply