ஜி-20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கவில்லை

Tuesday, November 8th, 2022 at 12:50 (SLT)

ஜி-20 நாடுகள் மாநாடு வருகிற 15, 16-ந்தேதி, இந்தோனேசியாவின் பாலி தீவில் நடக்கிறது. இதில் உலக தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளார்கள். ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ரஷியாவுக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இந்தோனேசியாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

ஜிம்பாப்வே முதல் முறையாக நானோ செயற்கைகோளை ஏவியது

Tuesday, November 8th, 2022 at 12:47 (SLT)

ஜிம்பாப்வே முதல் முறையாக சிறிய அளவிலான நானோ செயற்கைகோளை விண்ணில் ஏவியது. அமெரிக்காவின் வர்ஜீனியாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டில் ஜிம்சாட்-1 என்று பெயரிடப்பட்ட நானோ செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. மேலும் ஜப்பான் விண்வெளி கழகத்தின் பல நாடுகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக உகாண்டாவின் முதல் செயற்கைகோளும் ஏவப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

காலநிலை மாற்றம் குறித்து விரைவாக செயல்பட வேண்டும் : ரிஷி சுனக் பேச்சு

Tuesday, November 8th, 2022 at 8:24 (SLT)

ஆர்டிக், அண்டார்டிகா கண்டங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் உலக நாடுகள் இதுவரை கண்டிராத பெரும் அபாயத்தை எதிர்கொள்ள இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதனால் பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

மேலும் வாசிக்க >>>

கெர்சன் நகருக்குள் புகுந்த ரஷிய ராணுவம் : பொதுமக்களை வெளியேற்ற முயற்சிப்பதாக உக்ரைன் புகார்

Monday, November 7th, 2022 at 21:33 (SLT)

ரஷியா உக்ரைன் இடையேயான போர் கடந்த 9 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்தநிலையில், உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷிய ராணுவத்தினர், அங்குள்ள வீடுகளை ஆக்ரமித்து வருவதுடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இப்படி சாப்பிட்டால்தான் கொரோனா தாக்காது : ரயில் பயணிகளை மிரள வைத்த சீனப் பெண்

Monday, November 7th, 2022 at 21:28 (SLT)

சீனாவின் ரயிலில் பயணித்த ஒரு பெண், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டு, வாழைப்பழத்தை சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, ரயிலில் பயணிக்கும் போதும், பொது இடங்களிலும் மக்கள் எதையும் சாப்பிட கூடாது என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

மேலும் வாசிக்க >>>

மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேசிய குழு நியமனம்

Monday, November 7th, 2022 at 13:27 (SLT)

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பிரதமர் தினேஸ் குணவர்தன உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயத்திற்கான தேசிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு உறுதி கூறிய அமெரிக்கா, ஜெர்மனி

Monday, November 7th, 2022 at 8:39 (SLT)

ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் சமீபத்தில் சீனாவுக்கு சென்று அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேசினார். 3 ஆண்டுகளில் சீனாவுக்கு பயணம் செய்த ஜி7 நாடுகளின் முதல் தலைவர் என்ற வகையில், இந்த சந்திப்பு அமைந்து இருந்தது.

மேலும் வாசிக்க >>>

பொருளாதார நெருக்கடி எதிரொலி : கானா அதிபர் பதவி விலகக் கோரி வலுக்கும் போராட்டம்

Monday, November 7th, 2022 at 8:30 (SLT)

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அங்கு நிலவிய பொருளதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

மேலும் வாசிக்க >>>

6 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர்

Sunday, November 6th, 2022 at 21:35 (SLT)

கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எம்முடன் இணைந்து நிற்க ஒரு சிலருக்கு முடியாது என்பது நியாயமானது:சஜித் பிரேமதாஸ

Sunday, November 6th, 2022 at 21:32 (SLT)

எங்களுடன் ஒன்றிணைந்து நிற்க முடியாது என ஒரு சிலர் கூறுவதாகவும், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இந்நாட்டின் சுகாதார கட்டமைப்பிற்கு மூச்சு திட்டத்தின் ஊடாக பல்லாயிரம் கோடி ரூபா கணக்கில் உதவிகள் செய்யும் என்னுடன் அவர்களால் இணைய முடியாது என்று கூறுவது நியாயமானது தான் என்றும், எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு இந்நாட்டின் சிறார்களுக்கு சக்வல (பிரபஞ்சம்) திட்டத்தின் ஊடாக எண்ணில் அடங்காத சேவைகளை செய்யும் என்னுடன் இணைய முடியாது என்று அவர்கள் கூறுவது நியாயமானது தான் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தவறு செய்தால் மன்னிப்பு கேட்பேன்: டக்ளஸ் தேவானந்தா

Sunday, November 6th, 2022 at 13:48 (SLT)

நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செய்வதே எனது வழமையான செயற்பாடு என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மேலும் 4 அமைச்சுக்களை பொறுப்பேற்க ஜனாதிபதி தீர்மானம்

Sunday, November 6th, 2022 at 13:41 (SLT)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 04 அமைச்சுப் பதவிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 44/3 பிரிவின்படி, பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 12 பேர் படுகாயம்

Sunday, November 6th, 2022 at 13:36 (SLT)

அமெரிக்காவின் பிலடெலிபியாவில் உள்ள கென்சிங்டன் பகுதியில் ஒரு மதுபான விடுதிக்கு வெளியே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் வாசிக்க >>>

மேற்கு ஆப்பிரிக்காவில் எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு : இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை

Sunday, November 6th, 2022 at 13:33 (SLT)

மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியா கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் இருந்தனர்.

மேலும் வாசிக்க >>>

பலாத்கார வழக்கு இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகா கைது

Sunday, November 6th, 2022 at 13:18 (SLT)

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தனுஷ்கா குணதிலகா. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இவர் இடம் பெற்று உள்ளார். 31 வயதான குணதிலகா உலக கோப்பையில் கடைசியாக நமீபியாவுக்கு எதிராக கடந்த 16-ந்தேதி நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் விளையாடினார்.

மேலும் வாசிக்க >>>