முதல்வரின் உடல்நிலை குறித்து ஆளுநரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி

Monday, December 5th, 2016 at 6:59 (SLT)

modiசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளதையடுத்து, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, ஜெ. உடல் நிலைகுறித்து வித்யாசாகர் ராவ்விடம் கேட்டறிந்தார்.

 

 


அமெரிக்காவில் இசை விருந்தில் தீ விபத்து:பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

Monday, December 5th, 2016 at 6:33 (SLT)

kalifoniyaஅமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், ஆக்லாந்தில் உள்ள 2 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடத்தின் 2–வது மாடியில் நேற்று முன்தினம் கோல்டன் டோனா மற்றும் குழுவினரின் இசை மற்றும் நடன விருந்து நடந்தது. இந்த நிகழ்ச்சியை சுமார் 100 பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், அங்கு உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவியது. உடனே அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் ஓடினர். அலறினர். வெளியே வர முடியாதபடிக்கு தீ சுடர் விட்டு எரிந்ததுடன், பெரும் புகை மண்டலமும் எழுந்தது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் வாசிக்க >>>


இந்தோனேசியாவில் மாயமான போலீஸ் விமானம் விபத்துக்குள்ளானது

Monday, December 5th, 2016 at 6:29 (SLT)

Indonesien இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் பங்கா தீவுக்கு உட்பட்ட பங்கல் பினாங்கில் இருந்து ரியு தீவுக்கு உட்பட்ட படாமுக்கு சிறிய ரக போலீஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த ‘எம்.28 ஸ்கை ட்ரக்’ விமானத்தில் மொத்தம் 15 பேர் பயணம் செய்ததாகவும், அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விட்டதாகவும், அந்த விமானத்தை தேடும் பணி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.ஆனால் அந்த விமானத்தில் 8 போலீசாரும், 5 சிப்பந்திகளும் பயணம் செய்ததாக இப்போது தெரிய வந்துள்ளது. அந்த விமானம், கடலில் 24 மீட்டர் ஆழத்தில் விழுந்து மூழ்கி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் வாசிக்க >>>


அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த தகவல்கள் தெரியவரும்

Monday, December 5th, 2016 at 6:20 (SLT)

jeyaஅப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுவாசம், இதயம் ஆகியவை முழுமையாக செயல்பட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா முழு கண்காணிப்பில் இருக்கிறார். முதலமைச்சருக்கு 3 விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 4 மணி நேர தொடர் கண்காணிப்பிற்கு பிறகே முதலமைச்சர் உடல்நிலை குறித்த தகவல்கள் தெரியும். அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு முதலமைச்சர் உடல்நிலை குறித்த தகவல்கள் தெரியவரும் என  நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 


முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு செய்யப்பட்ட சிறு அறுவை சிகிச்சை முடிந்தது இன்னும் 24 மணி நேரம் முதல்வரின் உடல்நிலை கண்காணிக்கப்படும்

Monday, December 5th, 2016 at 6:12 (SLT)

jeyaஅப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 3 மணி வரை  ஜெயலலிதாவுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. சிறு அறுவை சிகிச்சை சற்று முன் முடிந்தது.

 

முதல்வரின் உடலில் ஏற்படும் எதிர்வினையைப்பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதயநாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சையின்றி சரிசெய்யக்கூடியது ஆஞ்ஜியோ ஆகும். ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அறுவை சிகிச்சை எந்த அளவிற்கு பலன் அளித்திருக்கிறது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  மேலும் வாசிக்க >>>


முதல்வருக்கு தீவிர சிகிச்சை கவர்னர் அப்பல்லோ வந்தடைந்தார்

Sunday, December 4th, 2016 at 23:49 (SLT)

gowenerஅப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த செய்தி கேட்ட தமிழக பொறுப்பு கவர்னர் விதியாசாகர் ராவ் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்ளை புறப்பட்டார். இரவு 11.10 மணியளவில் சென்னை விமானம் நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து இப்போது அப்பல்லோ வந்தடைந்தார்.


பின்லாந்தில் துப்பாக்கி சூடு: நகரசபை தலைவி, 2 பத்திரிகையாளர் பலி

Sunday, December 4th, 2016 at 23:42 (SLT)

finlandபின்லாந்தில் இமாட்ரா நகரில் உள்ளது. இங்கு பிரபலமான வுவோக்சென்வஹ்தி என்ற ரெஸ்டாரண்ட் ஒன்று உள்ளது. இந்த ரெஸ்டாரண்ட் முன் 23 வயதான உள்ளூர் வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கி மூலம் திடீரென கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினான்.அப்போது ரெஸ்டராண்டில் இருந்து வெளியே வந்த இரண்டு பத்திரிகையாளர்கள் உள்பட மூன்று பெண்கள் மீது துப்பாக்கு குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வாசிக்க >>>


ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு

Sunday, December 4th, 2016 at 21:49 (SLT)

jeyaசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்துவருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க >>>


ஆன்லைனில் கிண்டல்: பெற்றோர் முன்பு மாணவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Sunday, December 4th, 2016 at 13:05 (SLT)

gunஅமெரிக்காவில் உள்ள டெக்காஸ் பகுதியை சேர்ந்தவர் பிராண்டிவெலா. பள்ளி மாணவி. இவர் அழகாக இல்லை என்றும், குண்டாகவும், அசிங்கமாகவும் இருப்பதாகவும் ஆன்லைனில் சிலர் கிண்டல் செய்தனர்.இந்த கிண்டல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் மனம் உடைந்த அவர் தனது தங்கை ஜாக்குலினுக்கு இதுகுறித்து ஒரு தகவல் அனுப்பினார். மேலும் தான் தற்கொலை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் வாசிக்க >>>


ஹிட்லருக்கு பயந்து ஒளித்து வைக்கப்பட்டிருந்த கார் புதையல் :வீடியோ இணைக்கப்பட்டுள்ளது

Sunday, December 4th, 2016 at 13:00 (SLT)

carஇரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டுக்குள் ஹிட்லர் தலைமையிலான நாஜிப்படைகள் நுழைந்தபோது அங்கு வாழ்ந்த செல்வந்தர்கள் தங்களுடைய கார்கள் நாஜிக்களின் பார்வையில் சிக்கினால் அவற்றை பறிமுதல் செய்து விடுவார்கள் என அஞ்சியுள்ளனர். மேலும் வாசிக்க >>>


பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு இறுதி மரியாதை

Sunday, December 4th, 2016 at 12:46 (SLT)

castoக்யூபாவின் கிழக்கு நகரான சாண்டியாகோவில் நடந்த நிகழ்ச்சியில், அதிபர் ராவுல் காஸ்ட்ரோ தனது மறைந்த சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி மரியாதையை வழிநடத்திச் சென்றார்.அந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த வாரம் தனது 90 ஆவது வயதில் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவால் முன்னஎடுக்கப்பட்ட புரட்சியின் சோஷிலிச கொள்கைகளுக்கு மரியாதை வழங்கப்போவதாக ராவுல் காஸ்ட்ரோ சூளுரைத்தார்.ஃபிடல் காஸ்ட்ரோவின் வேண்டுகோளுக்கு இணங்க புராதனச் சின்னங்கள் மற்றும் சாலைகளுக்கு அவரின் பெயர் சூட்டுவதை க்யூபா தடை செய்யும் எனவும் அவர் அறிவித்தார். மேலும் வாசிக்க >>>


மரபை மீறிய நடவடிக்கை: தைவான் அதிபருடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு சீனா கடும் எதிர்ப்பு

Sunday, December 4th, 2016 at 6:20 (SLT)

tramமரபை மீறி தைவான் அதிபர் சாங் இங்க் வென்னுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தூதரக உறவு இல்லை கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடு தைவான். இந்த நாட்டை தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற ஒரு மாகாணமாக சீனா இன்னும் கருதுகிறது. கடந்த காலத்தில், போர் தொடுத்து தைவானை கைப்பற்றப்போவதாக சீனா மிரட்டல்கள் விடுத்தது உண்டு.அந்த நாட்டின் அதிபராக சாய் இங்க் வென் (வயது 59) என்ற பெண் தலைவர் உள்ளார்.தைவானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான தூதரக உறவு 1979–ம் ஆண்டு முறிந்து போனது.மரபை மீறிய நடவடிக்கை மேலும் வாசிக்க >>>


ஆப்கானிஸ்தானில் மாணவரை பொது இடத்தில் தூக்கில் போட்ட தலீபான்கள்

Sunday, December 4th, 2016 at 6:14 (SLT)

thukkuஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அவர்களை ஒடுக்கும்பணியில் உள்நாட்டு படையினருடன், அமெரிக்க படையினர் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், காபூல் அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பாய்ஸ் உல் ரகுமான் வார்டாக் என்ற மாணவரை தலீபான்கள் பொது இடத்தில் தூக்கில் போட்டனர். இவர், காபூல் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் 4-ம் ஆண்டு மாணவர் ஆவார். மேலும் வாசிக்க >>>


தென் கொரிய பாராளுமன்றத்தில் அதிபர் பார்க்கின் பதவியை பறிக்க தீர்மானம் தாக்கல்

Sunday, December 4th, 2016 at 6:08 (SLT)

Southwest koreaதென் கொரிய அதிபர் பார்க் கியுன் ஹை, நெருங்கிய தோழியால் ஊழல் வழக்கில் சிக்கி தவித்து வருகிறார். சோய் சூன் சில் என்ற அவரது தோழி, அதிபரிடத்தில் தனக்குரிய செல்வாக்கை பயன்படுத்தி, தனது தொண்டு நிறுவனத்துக்கு பெரும் தொழில் அதிபர்களிடம் மிகப்பெரும் தொகையை நன்கொடைகளாகப் பெற்றுள்ளார். சோய் சூன் சில்லும், அவருக்கு அரசு ரகசியங்களை கசிய விட்ட அதிபரின் முன்னாள் ஆலோசகர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர். மேலும் வாசிக்க >>>


கலிபோர்னியா ரேவ் பார்ட்டியில் பயங்கர தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு

Saturday, December 3rd, 2016 at 23:24 (SLT)

kalifoniyaஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் ஆக்லேண்டில் கோஸ்ட் ஷிப் கிளப் உள்ளது. இங்கு உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு ரேவ் பார்ட்டி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு மது அருந்தியும் விரும்பிய உணவு வகைகளை சாப்பிட்டும் நடனமாடி மகிழ்ந்தனர்.அப்போது, சுற்றிலும் மூடப்பட்டிருந்த அந்த கிளப்பின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. இதனால் உள்ளே இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். அவர்களில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பலர் தீப்பிடித்த பகுதியை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். மேலும் வாசிக்க >>>