ரோஹிதவின் மகள் பொலிஸில் சரண்

July 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (30) காலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார். சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைவாக அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்க எரிபொருள் நிறுவனத்துக்கு ஏகபோக உரிமை வழங்க அரசாங்கம் முயற்சிக்கிறதா? : திஸ்ஸ அத்தநாயக்க

July 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவின் தீர்வை வரியை மேலும் குறைத்துக்கொள்வதற்காக இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கும் அமெரிக்க நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோக ஏகபோக உரிமையை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அதேநேரம் 30வீத தீர்வை வரியை குறைத்துக்கொள்ள முடியாமல் போனால் ஆடை தொழிற்சாலைகளுடன் தொடர்புடைய 3இலட்சம் பேர்வரை பாதிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தவுமில்லை, மோசடி செய்யவுமில்லை : நாமல் ராஜபக்ஷ

July 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை,மோசடி செய்யவுமில்லை. நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எமது தரப்பு நியாயத்தை குறிப்பிட்டு நீதியை பெற்றுக்கொள்வோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரம்புக்கனை – ஹதரலியத்த வீதியில் விபத்து : இருவர் உயிரிழப்பு

July 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ரம்புக்கனை – ஹதரலியத்த பிரதான வீதியில் வெலிக்கடபொல என்ற பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில், ஓர் லொறி, வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியது. குறித்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடக்கு ஆளுநர் – சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு: வடக்கில் பின்தங்கிய கிராமங்கள் குறித்து விசேட கவனம்

July 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே தமது இந்தப் பயணத்தின் நோக்கம் என தூதுவர் குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் தூதுவருடன் சந்திப்பு

July 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றிய பொனி ஹர்பக் (Bonnie Harbach) இன் பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னர், அவர் பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (28) சந்தித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

July 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இன்று (29) அதிகாலை 12:11 மணியளவில், வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாமல் ராஜபக்ஸ அடுத்த ஜனாதிபதியென புலனாய்வு பிரிவு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

July 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாமல் ராஜபக்ஸ அடுத்த ஜனாதிபதியென புலனாய்வு பிரிவு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் 104 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

July 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்று புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் உயிர்மாய்ப்பு

July 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பேராதனை – யஹலதென்ன – சுனிலகம பகுதியில் உள்ள வீட்டில் அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.உயிரிழந்தவர்கள் 52 வயதுடைய யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் , 44 வயதுடைய அவரது மனைவி மற்றும் அவர்களது 17 வயதுடைய மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேவைப்பட்டால் ஜனாதிபதி ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டும் : அமைச்சர் லால் காந்தா

July 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அதிகரித்த பாதுகாப்பு தேவை என்றும், தேவைப்பட்டால் ஹெலிகாப்டரைக் கூட பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது : நாமல் ராஜபக்ஷ

July 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது.கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த வேண்டுமாயின் முதலில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சங்கங்கள் நீக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

July 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொரளையில் விபத்து : ஒருவர் பலி, ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம்

July 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு, பொரளை, கனத்த சந்தி பகுதியில் இன்று திங்கட்கிழமை (28) காலை வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாலைத்தீவு புறப்பட்டார் ஜனாதிபதி

July 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்திற்காக இன்று (28) முற்பகல் நாட்டில் இருந்து புறப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button