தொடர் மிரட்டலால் அதிருப்தி அமெரிக்கா இல்லாத எதிர்காலம் உருவாக்கப்படும்: ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
தொடர் மிரட்டலால் அதிருப்தி அடைந்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா இல்லாத எதிர்காலம் உருவாக்கப்படும் என்று எச்சரித்தார். மேற்காசியாவில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் போர்நிறுத்தத்தை வலுப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பரந்த ஒப்பந்தம் செய்ய வற்புறுத்தி வரும் நிலையில், ஈரான் தனது அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்களை ஒரு தேசிய சொத்தாக பாதுகாக்கும் என்று அந்நாட்டின் உச்ச தலைவர் தெரிவித்தார்.
1622 ம் ஆண்டு ஹோர்முஸ் ஜலசந்தியில் இருந்து போர்த்துக்கீசிய படைகள் வெளியேற்றப்பட்டதை நினைவுகூரும் தேசிய பாரசீக வளைகுடா தினத்தை முன்னிட்டு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி வெளியிட்டுள்ள அறிக்கை ஈரான் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது. அதில் அவர் கூறியதாவது: இறைவனின் உதவியாலும் சக்தியாலும், பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் ஒளிமயமான எதிர்காலம் என்பது அமெரிக்கா இல்லாத ஒரு எதிர்காலமாக, அதன் மக்களின் முன்னேற்றம், வசதி மற்றும் செழிப்புக்கு சேவை செய்யும் ஒன்றாக அமையும்.
பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவின் கடற்பரப்பிற்கு அப்பால் உள்ள நமது அண்டை நாடுகளுக்கும் நமக்கும் ஒரு பொதுவான தலைவிதி உள்ளது. ஆயிரக்கணக்கான கிமீ தொலைவிலிருந்து வந்து பேராசையுடனும் வன்மத்துடனும் செயல்படும் வெளிநாட்டினருக்கு, அதன் ஆழ்கடலின் அடியில் தவிர, வேறு எங்கும் இடமில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply