காலம் கடப்பதற்குள் தீவிரமாகச் செயல்படுங்கள் : டிரம்ப்

March 26th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தனது 15 அம்ச சமாதான முன்மொழிவுக்கு ஈரான் அளித்த பதிலில் அமெரிக்க அதிபர் அதிருப்தி தெரிவித்திருந்தார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்ட மற்றொரு பதிவிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டார். அவர் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களை வித்தியாசமானவர்கள் மற்றும் விசித்திரமானவர்கள் என்று குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாளை கருணைக்கொலை செய்யப்படவிருக்கும் இளம்பெண்

March 26th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணொருவர் கருணைக்கொலை செய்யப்பட ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமும் ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றமும் அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து, நாளை அவர் கருணைக்கொலை செய்யப்பட உள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

March 26th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் 57 போதை மாத்திரைகளுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரை பாவனை அதிகமாக காணப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே , ஐந்து இளைஞர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எரிபொருள் விநியோகக் கட்டணங்கள் 25% அதிகரிக்கப்பட வேண்டும்

March 26th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எரிபொருள் விநியோகக் கட்டணங்கள் சுமார் 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஏ.எம்.எச். அதிகாரி குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பங்களாதேஷில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் பலி

March 26th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பங்களாதேஷில் பேருந்தொன்றில் ஆற்றில் கவிழ்ந்ததில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பங்களாதேஷின் பத்மா ஆற்றைக் கடப்பதற்கு படகு போக்குவரத்துதான் பிரதானமாகும். பேருந்துகள் மற்றும் சிறிய ரக வாகனங்கள் கூட படகுகளின் மூலமாக ஆற்றைக் கடந்து சென்று மீண்டும் வீதிப் பயணத்தை தொடர்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நிக்கோலஸ் மதுரோ இன்று நியூயோர்க் நீதிமன்றில் ஆஜர்

March 26th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்கக் காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, இன்று (26) நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். முன்னாள் ஜனாதிபதி மதுரோ நீதிமன்றத்தில் ஆஜராகும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நீங்கள் உங்களுடனே பேச்சுவார்த்தை நடத்துகிறீகளோ : ஈரான்

March 26th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்கா தன்னுடைய போரில் தோற்று கொண்டிருக்கிறது. அதனால், தன்னை தற்காத்து கொள்வதற்காக அமெரிக்கா தன்னிடமே பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது என ஈரான் இராணுவத்தின் ஒருங்கிணைந்த படைக்கான செய்தி தொடர்பாளர் இப்ராகிம் ஜல்பகாரி இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் கூறினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையேல் நரகத்தைக் காட்டுவார் டிரம்ப் : வெள்ளை மாளிகை

March 26th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையெனில் டிரம்ப் நரகத்தை கட்டவிழ்த்து விடுவார் என ஈரானிடம் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இராணுவத் தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு ஈரானை வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. இல்லையெனில் அமெரிக்கா முன்பை விடக் கடுமையாகத் தாக்கும் என்றும் கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை : ஈரான் தொடர்ந்து போரிடும் வெளியுறுவு அமைச்சர்

March 26th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தெஹ்ரானுக்கு எண்ணம் இல்லை என்றும், ஈரான் தொடர்ந்து போரிடும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மீண்டும் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாரோ ஒருவர் உலகிற்குத் தீ வைக்கிறார்கள் : ட்ரம்ப்பைச் சாடும் ஸ்பெயின் பிரதமர்

March 26th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசுகையில், தற்போதைய ஈரான் போர் “அர்த்தமற்றது மற்றும் சட்டவிரோதமானது” என்று கடுமையாகச் சாடினார். 2003-ஆம் ஆண்டு ஈராக் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பை விட இது மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். “மத்திய கிழக்கில் விழும் ஒவ்வொரு குண்டும், ஐரோப்பியக் குடும்பங்களின் பாக்கெட்டுகளைப் பாதிக்கிறது” என்று கவலை தெரிவித்த அவர், ஸ்பெயினில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைப் போருக்காகப் பயன்படுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், ஸ்பெயின் உடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முதியோர் கொடுப்பனவுக்கான விசேட அறிவிப்பு

March 25th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அணுசக்தி விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்ப நாசா திட்டம்

March 25th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தமது சந்திரன் மற்றும் செவ்வாய் கிரக வியூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. சந்திரனைச் சுற்றி வரும் விண்வெளி நிலையத் திட்டங்களைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக அடுத்த ஏழு ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டொலரை செலவிட்டு சந்திரனின் மேற்பரப்பில் ஒரு தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போரை முடிவுறுத்த 15 யோசனைகள் அடங்கிய ஆவணம் ஈரானுக்கு

March 25th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ட்ரம்பை விளாசிய ஜெர்மனி அதிபர் : சர்வதேச அளவில் வெடிக்கும் புதிய சர்ச்சை

March 25th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவத் தாக்குதல், சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பானது என்றும், இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு “பேரழிவுகரமான அரசியல் தவறு” என்றும் ஜெர்மனி அதிபர் பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மையர் (Frank-Walter Steinmeier) சாடியுள்ளார். பெர்லினில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்க-ஜெர்மனி உறவுகளில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகக் கவலை தெரிவித்தார். குறிப்பாக, ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தல் இருந்ததாகக் கூறப்படும் காரணங்கள் எதுவும் நம்பத்தகுந்ததாக இல்லை என்றும் அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொலம்பியா விமான விபத்து: பலி எண்ணிக்கை 66-ஆக உயர்வு 

March 24th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் புட்டுமாயோ (Putumayo) மாகாணத்தில் உள்ள புவேர்ட்டோ லெகிசாமோ (Puerto Leguizamo) விமான நிலையத்திலிருந்து 125 பேருடன் புறப்பட்ட இராணுவத்திற்குச் சொந்தமான சி-130 ஹெர்குலஸ் (C-130 Hercules) விமானம், ஓடுபாதையிலிருந்து எழும்பிய சில நிமிடங்களிலேயே தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 66 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதில் 11 விமானப்படை வீரர்கள் மற்றும் ஏராளமான இராணுவத்தினர் அடங்குவர். எஞ்சிய 57 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button