புலம்பெயர் புலிகளின் தலைவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனை கைது செய்ய அமெரிக்கா கோரும் `சாட்சியங்கள்` மற்றும் புலனாய்வு தகவல்களை இலங்கை அரசு பரிமாறத் தயாராக இருப்பதாக அமைச்சரும், பாதுகாப்புப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் விஸ்வநாதன் உருத்திரகுமாரனுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுப்பதற்கு, அவர் அமெரிக்க மண்ணில் எவ்வித குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகவில்லையென இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்காவின் தென்னாசிய மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி வெளிவிவகார அமைச்சர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்திருந்தார். Read the rest of this entry »














