சரத் பொன்சேகா திடீர் இந்தியா விஜயம்
ஐக்கிய தேசிய கூட்டமைப்பினதும் மக்கள் விடுதலை முன்னணியினதும் பொது வேட்பாளராக இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று (டிசெம்பர் , 2) இரவு இந்தியா சென்றுள்ளார். அவரது இந்த திடீர் இந்திய பயணம் தனிப்பட்ட பிரயாணம் எனச்சொல்லப்பட்ட போதும் கொழும்பு ஊடகங்கள் பல்வேறு காரணங்களை ஊகித்தெழுதி உள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் நெருங்கி வரும் நிலையில் புதிய திருப்பங்கள் நிகழ அதிக வாய்ப்புகள் இருப்பதாக மூத்த ஊடகவியாளர் ஒருவர் ரெலோ நீயூஸ்க்கு கருத்து தெரிவித்தார். ஜெனரல் சரத் பொன்சேகா தனது தனிப்பட்ட பயணத்தை முடித்துக் கொண்டு நாளை கொழும்பு திருப்புவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
You can skip to the end and leave a response. Pinging is currently not allowed.

Leave a Reply