7 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை : புரட்டி எடுக்கும் கொரோனா

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 84 லட்சத்து 34 ஆயிரத்து 389 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 60 லட்சத்து 72 ஆயிரத்து 867 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 64 ஆயிரத்து 732 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 1 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 96 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 1,58,912
பிரேசில் – 94,702
மெக்சிகோ – 47,746
இங்கிலாந்து – 46,210
இந்தியா – 38,135
இத்தாலி – 35,166
பிரான்ஸ் – 30,294
ஸ்பெயின் – 28,472
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply