ஜெர்மனியை விடாத கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது. அவர்களில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி 12-வது இடத்தில் உள்ளது
இந்நிலையில், ஜெர்மனியில் ஒரே நாளில் 18,234 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஜெர்மனியில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, ஜெர்மனியில் டிசம்பர் 20-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டு அதிபர் ஏஞ்செலா மெர்கல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply