உலகம் முழுவதும் 7 கோடியே 59 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,

7 கோடியே 59 லட்சத்து 74 ஆயிரத்து 115 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 10 லட்சத்து 52 ஆயிரத்து 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 920 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 16 லட்சத்து 80 ஆயிரத்து 116 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 5 கோடியே 32 லட்சத்து 41 ஆயிரத்து 859 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply