மீராவோடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மகன் பலி தந்தை படுகாயம்
மட்டக்களப்பு – மீராவோடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மோட்டர் சைக்கிள் உழவு இயந்திரத்தை முந்திச் செல்வதற்கு முயற்சித்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த வாழைச்சேனை விநாயகர்புரம் பகுதியைச் சேர்ந்த தந்தையும் மகனுமே முன்னால் சென்ற உழவு இயந்திரத்தில் மோதுண்டதில் ஜெயசீலன் கிரிஜன் (வயது – 18) என்பவர் ஸ்தலத்திலயே மரணமடைந்துள்ளதுடன்,
தந்தையான சிவப்பிரகாசன் ஜெயசீலன் என்பவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply