223 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள 223 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 35 பேர், மலேசியாவிலிருந்து 14 பேர், கட்டாரிலிருந்தும் 119 பேர் மற்றும் இந்தியாவிலிருந்து 55 பேர் ஆகியோர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்த டைந்ததாக கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற் பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகக் கட்டு நாயக்க விமானநிலையத்திலுள்ள செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply