குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து : 12 கொரோனா நோயாளிகள் பலி

குஜராத் மாநிலம் பாரூச் நகரில் படேல் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில், இந்த சிகிச்சை மையத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புப் படைவீரர்கள் அங்கிருந்த மற்ற நோயாளிகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றினர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply