உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 32 லட்சத்தைக் கடந்தது
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 லட்சத்தைத் தாண்டியுள்ளது.உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.26 கோடியைக் கடந்துள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.98 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.89 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.12 லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply