பண்ணை கடலில் விழுந்த நபர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி. கௌதமன் (வயது 31) எனும் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பண்ணை பாலத்தடியில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதை கழித்துக் கொண்டு இருந்த வேளை குறித்த நபர் தவறி விழுந்துள்ளார்.

தவறி விழுந்தவரை பாலத்தின் கீழான நீரோட்டம் அடித்து சென்றிருந்த நிலையில் நேற்றைய தினம் சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக கடற்படையினை தேடுதல் நடாத்தி இருந்தனர்.

இந்நிலையில் பண்ணை பகுதியில் இருந்து இன்று (09) திங்கட்கிழமை காலை குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply